சினிமா
‘மோனிகா’ பாடல் ரிலீஸால் அதிரும் சோஷியல் மீடியா..!பூஜாவின் ஸ்வாக் ஆட்டம் செம
‘மோனிகா’ பாடல் ரிலீஸால் அதிரும் சோஷியல் மீடியா..!பூஜாவின் ஸ்வாக் ஆட்டம் செம
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171ஆவது திரைப்படமான ‘கூலி’ உருவாகி வருகிறது.இந்நிலையில் ஆரம்பம் முதல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘மோனிகா’ தற்போது வெளியாகியுள்ளது.இந்த பாடல் தற்போது ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் பாடலாக மாறி வருகிறது.இந்த பாடலில் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே, சிவப்பு நிற உடையில் அசத்தலான ஆட்டத்துடன் இடம் பிடிக்கிறார்.அவருக்கு இணையாக, ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தின் மூலம் பிரபலமான சௌபின் ஷாஹிர் நிழல் போல் நடனமாடும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.அதேவேளை அனிருத்தின் இசையும் வெறித்தனமாக இருக்கிறது என ரசிகர்கள் ஃபயர் விட்டு கொண்டாடி வருகின்றனர். அத்துடன் சந்திரமுகி படத்தில் வேட்டையன் சொல்லும் லகலக வாய்ஸ் இதில் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே தளபதி படத்தில் வரும் ஒரு காட்சி இதில் அப்படியே ரீ கிரியேட் செய்யப்பட்டிருக்கிறது.இந்நிலையில் ‘மோனிகா’ ரிலீஸ் ஆன சில மணிநேரங்களிலேயே மில்லியன் பார்வைகள் கடந்து வைரலாகி வருகின்றது.அதேவேளை கூலி திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 14 வெளியாகும் நிலையில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.