சினிமா
ரஜனியிடம் ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்
ரஜனியிடம் ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’.
இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 28ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ், ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் “என் தலைவர் மற்றும் குரு ரஜினியை சந்தித்து ‘ஜெயிலர்’ வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். ‘சந்திரமுகி- 2’ 28ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் அவரிடம் ஆசிப்பெற்றேன்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.