சினிமா

லியோ இசை வெளியீட்டு விழா ரத்து; காரணம் இதுவா!

Published

on

லியோ இசை வெளியீட்டு விழா ரத்து; காரணம் இதுவா!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும்  ‘லியோ’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வெளியாகவுள்ளது.

Advertisement

இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் லியோ பட இசை வெளியீட்டு விழாவை நடத்தப்போவதில்லை என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்கிறோம். நிகழ்ச்சியை காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகமா வருகின்றன. எனவே பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். மேலும் பலர் நினைப்பது போல் இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ நிறுத்தப்படுகின்றமை அல்ல” என குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version