இலங்கை
லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி!
லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி!
நேற்றையதினம்(11) இடம்பெற்ற இச் சம்பவத்தில் 75 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லொறி ஒன்று, கல்கிஸ்ஸ பகுதியில் மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்ற வேளையில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் லொறியின் இடது பின்புற சக்கரத்தின் கீழ் விழுந்து நசுங்கிப் போயுள்ளார்.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.