உலகம்
வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பலர் உயிரிழப்பு!
வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பலர் உயிரிழப்பு!
(புதியவன்)
தெற்கு துருக்கி நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
பலத்த மழை காரணமாக பேருந்து ஒன்று எதிர் திசையில் வந்த இரண்டு மகிழுந்துகள் மீது மோதியதையடுத்து கனரக வாகனம் ஒன்று மூன்று வாகனங்கள் மீது மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காயமடைந்த 39 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அவர்களில் எட்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(ஞ)