சினிமா

விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா; ‘கங்குவா” படப்பிடிப்புக்கள் இடைநிறுத்தம்!

Published

on

விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா; ‘கங்குவா” படப்பிடிப்புக்கள் இடைநிறுத்தம்!

புதியவன் 

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவரும்  ‘கங்குவா’ திரைப்படத்தில் பொலிவூட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Advertisement

இத்திரைப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘கங்குவா’ படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கும் போது நடிகர் சூர்யா விபத்தில் சிக்கியுள்ளார். இதையடுத்து இப்படப்பிடிப்புக்கள் யாவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், விபத்துக்கு பிறகு நடிகர் சூர்யா தனது X(ட்விட்டர்) தளத்தில் பதிவொன்றையிட்டுள்ளார். அப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; “அன்பார்ந்த நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் அன்பான ரசிகர்களுக்கு, சீக்கிரம் குணமடைய வாழ்த்தும் குறுந்தகவல்கள் அனைத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது சிறப்பாக உணர்கிறேன். உங்களின் அன்புக்கு எப்போதும் நான் கடமைப்பட்டுள்ளேன்,” என குறிப்பிட்டுள்ளார். (ச)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version