இலங்கை
வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு!
வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு!
பாணந்துறைஇ கல்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 47 வயதுடைய நபரும் 42 வயதுடைய பெண்ணொருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர்கள் நீண்ட காலமாகத் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் இந்த பெண்ணை கொலை செய்துவிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.