உலகம்
ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரை காணவில்லை !
ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரை காணவில்லை !
காசா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தை வழிநடத்திய யாஹ்யா சின்வார் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும்
காணாமல் போன அவரை கண்டுபிடிக்க இஸ்ரேலும் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யாஹ்யா சின்வார் நீண்ட காலமாக காணாமல் போயுள்ளதுடன்
கான், ஹாரெட்ஸ், மாரிவ் மற்றும் வாலா போன்ற முக்கிய இஸ்ரேலிய ஒலிபரப்பாளர் மற்றும் IDF இராணுவ புலனாய்வு இயக்குநரகம் போன்ற செய்திகள் சின்வார் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும்
ஆனால் அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக ஷின் பெட் நிறுவனம் நம்புவதாகவும் ஒரு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன.
காசா பகுதியின் சுரங்கப்பாதையில் மறைந்திருந்த ஹமாஸ் தலைவர், ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு காணாமல் போயுள்ளதாகவும் அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் சந்தேகிக்கின்றன. [ ஒ ]