பொழுதுபோக்கு
1996-ல் மனைவி, 2005-ல் அம்மா; 9 ஆண்டுகளில் பிரபல நடிகருடன் கேரக்டர் மாறி நடித்த நடிகை
1996-ல் மனைவி, 2005-ல் அம்மா; 9 ஆண்டுகளில் பிரபல நடிகருடன் கேரக்டர் மாறி நடித்த நடிகை
சினிமாவை பொறுத்தவரையில், நடிகர்கள் எவ்வளவு வயதானாலும், இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடிப்பார்கள். அதே சமயம், நடிகைகள் திருமணம் ஆகிவிட்டால், அம்மா, அக்கா, உள்ளிட்ட குணச்சித்திர கேரக்டாகளுக்கு மாறிவிடுவார்கள். அதிலும் குறிப்பாக, தங்கள் குணச்சித்திர கேரக்டருக்கு மாறியபிறகு, ஹீரோயினாக நடித்த நடிகர்களுக்கே அம்மா அக்கா உள்ளிட்ட கேரக்டர்களில் நடிப்பது வழக்கம்.நடிகை மீனா ரஜினிகாந்துக்கு மகளாகவும், அவருக்கே காதலி, மனைவி கேரக்டரிலும் நடித்துள்ளார். அதேபோல் மலையாளத்தில் நடிகர் மம்முட்டிக்கு அம்மா, மனைவி, மகள் என 3 கேரக்டர்களிலும் மீனா நடித்துள்ளார். அதேபோல் சில படங்களில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த நடிகை சுஜாதா பாபா படத்தில் அவரின் அம்மா கேரக்டரில் நடித்திருந்தார். அபூர்வராகங்கள் படத்தில் கமல்ஹாசனின் காதலியாக நடித்த ஸ்ரீவித்யா அபூர்வ சகோதரர்கள் படத்தில் அவரின் மனைவி மற்றும் அம்மா கேரக்டரில் நடித்திருப்பார்.அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜூக்கு மனைவியாகவும் அதே சமயம் அடுத்த 9 வருடங்களில் அவருக்கு தாயாகவும் நடித்துள்ளவர் தான் நடிகை கீதா. 1978-ம் ஆண்டு, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பைரவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை தகீதா. அடுத்து, அடுத்து கர்ஜனை, சிவாஜியுடன், தியாகி, கேளடி கண்மணி, தளபதி, கல்கி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள நடிகை கீதா, தற்போது முன்னணி கேரக்டர் நடிகையாக வலம் வருகிறார்.கடந்த 1996-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் கல்கி. பிரகாஷ்ராஜ், ரஹ்மான், ஸ்ருதி, கீதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் கீதா பிரகாஷ’ ராஜூன் முதல் மனைவி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு 1998-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படத்தில் நாசரின் மனைவியாக சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பிறகு தமிழில் நடிக்காத நடிகை கீதா, 2005-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சிவகாசி படத்தில் அவரின் அம்மா கேரக்டரில் ரீ-என்டரி ஆனார்.பேரரசு இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், விஜயின், அண்ணாக பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் அம்மாவாக கீதா நடித்திருந்தார். 1996-ம் ஆண்டு கல்கி படத்தில் பிரகாஷ்ராஜ் மனைவியாக நடித்த கீதா அடுத்த 9 வருடத்தில் அவரின் அம்மாவாக நடித்திருந்தார். சிவகாசி படத்தின் படப்பிடிப்பில், ஒருவர் என்னங்க, அவருக்கு மனைவியா நடிச்சீங்க, இப்போ அம்மாவாக நடிக்கிறீங்க எனறு கேட்டபோது, இது சினிமா என்று பதில் அளித்துள்ளார் கீதா.மேலும் தான் விஜயின் தீவிர ரசிகை என்றும், அவர் அதிகமாக பேசமாட்டார். ரொம்ப அழகா பேசுவார் அலட்டிக்கொள்ளவே மாட்டார் என்று கூறியுள்ள கீதா, பக்கத்தில் அமர்ந்துகொண்டு பேசுவார். யூஎஸ் பற்றி கேட்பார் என்று கூறியுள்ளார்.