சினிமா
2ஆவது திரைப்படத்திலேயே 100 கோடி வசூல் சாதனை படைத்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்
2ஆவது திரைப்படத்திலேயே 100 கோடி வசூல் சாதனை படைத்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.
கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ‘லவ் டுடே’திரைப்படத்தில் இவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.
இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 100 நாட்களை கடந்து ஓடிய இத்திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் உருவான படமாகும்.
இத்திரைப்படம் சுமார் 100 கோடி வசூல் சாதனை படைத்திருந்ததுடன் இரண்டாவது படத்திலேயே அதிக வசூல் சாதனை படைத்த இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் விளங்குகின்றார்.
இதையடுத்து ‘லவ் டுடே’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.