உலகம்

24 மணித்தியாலங்களிற்கு இடைநிறுத்தப்பட்ட சூடான் போர்

Published

on

24 மணித்தியாலங்களிற்கு இடைநிறுத்தப்பட்ட சூடான் போர்

உள்நாட்டு போர் நடந்து வரும் சூடானில் தற்காலிகமாக 72 மணி நேரத்துக்கு சண்டையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது

துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில் துணை ராணுவ தளபதி முகமது ஹம்தான் தகலோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே சுமுக முடிவு ஏற்படவில்லை. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு மோதல் வெடித்தது.

Advertisement

ராணுவம், துணை ராணுவத்தினர் ஆங்காங்கே குழுக்கள் குழுக்களாக சண்டையிட்டு வருகின்றனர்.சூடானில் ராணுவம், துணை ராணுவம் ஆங்காங்கே குழுக்கள் குழுக்களாக சண்டையிட்டு வருவதால் பதற்றமான சூழல்நிலை நிலவருகிறது. இந்த நிலையில், உள்நாட்டு போர் நடந்து வரும் சூடானில் தற்காலிகமாக 72 மணி நேரத்துக்கு சண்டையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவத்துக்கு எதிராக போராடி வரும் துணை ராணுவ படையினர் போர் நிறுத்ததுக்கு ஒத்துக்கொண்டுள்ளனர். ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி 3 நாட்களுக்கு போர் நிறுத்ததுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் பயணம் போர்நிறுத்த காலத்தில் “முழுமையான போர்நிறுத்தத்திற்கு” ராணுவ படை உறுதியளித்துள்ளது. சூடான் ராணுவத்திடம் இருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

 

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version