இலங்கை
24 மணிநேரத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
24 மணிநேரத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில், அடுத்த 24 மணிநேரத்திற்கு காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 65 கிலோமீற்றராக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அப்பகுதியில் பகுதிகளில் கடலலை வேகம் 2.5 முதல் 3 மீற்றர் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, அடுத்த 24 மணிநேரத்திற்கு குறித்த கடற்பகுதிகளில் படகு பயணங்களை செய்ய வேண்டாம் எனவும், கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.