சினிமா

50 ஆவது திரைப்படம் குறித்து மகிழ்ச்சியில் அஞ்சலி

Published

on

50 ஆவது திரைப்படம் குறித்து மகிழ்ச்சியில் அஞ்சலி

கற்றது தமிழ்  திரைப்படன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.
 
இவரது சினிமா வரலாற்றில் அங்காடித் தெரு படம் திருப்புமுனையாக அமைந்தது. 
 
மங்காத்தா, கலகலப்பு, அரவான், இறைவி, பலூன், நாடோடிகள் 2 உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

 தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் இதுவரை 49 படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

 தற்போது அஞ்சலியின்  50ஆவது திரைப்படம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி என்ற தலைப்பில்  ஏற்கனவே அஞ்சலி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கீதாஞ்சலி பேய் படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகிறது.
 
இந்த படம் தமிழ், தெலுங்கு மொழியில் வெளியிடப்படவுள்ளது.  
“கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி” எனது 50ஆவது திரைப்படம். 16 ஆண்டுகளாக எனது உயர்விலும் தாழ்விலும் பயணித்த அனைவருக்கும் நன்றி” என அஞ்சலி கருத்துத் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version