இலங்கை
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
சட்டவிரோதமாக நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் நேற்று (12) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்துக்கு கிடைத்த தகவலின் பேரில் அம்பாந்தோட்டை, நாகரவெவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து சட்டவிரோதமாக நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்களும் 04 கஞ்சா செடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்கள் மாத்தறை மற்றும் மித்தெனிய ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 40 மற்றும் 50 வயதுடையவர்கள் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை