பொழுதுபோக்கு

தாளத்தில் இசையின் ராஜா… இளையராஜாவை தத்துரூபமாக வரைந்த கோவை கலைஞர் – வீடியோ!

Published

on

தாளத்தில் இசையின் ராஜா… இளையராஜாவை தத்துரூபமாக வரைந்த கோவை கலைஞர் – வீடியோ!

கோவையைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் இளைய ராஜாவின் உருவப் பட்டத்தை ஒரு தபேலாவில் தாளமிட்டபடியே வரைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.கோவையைச் சேர்ந்தவர் யு.எம்.டி ராஜா. காலச் சூழலுக்கு ஏற்ப கலைப் பொருட்களை உருவாக்கி கோவை மக்களின் கவனத்தை ஈர்த்தவர்.பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கலைப் பொருட்கள் மற்றும் ஓவியங்களையும் வரைந்து வருகிறார்.இவர் முத்தம் கொடுத்தே கமல்ஹாசன் ஓவியத்தை வரைந்து இருந்தார், மேலும், பாட்டிலுக்குள் விஜய் ஓவியத்தை வரைந்தும் அசத்தினார். இதனிடையே தற்போது சிறிய தபேலா மீது இசையமைப்பாளர் இளையராஜாவின் ஓவியத்தை வரைந்து உள்ளார். தபேலா மீது ஓவியம் வரைவது பெரிய விஷயமா ? என்று கேட்டுவிட வேண்டாம். பின்னணியில் இசைக்கும் இசைக்கேற்ப, தூரிகையுடன் ஒரு குச்சியை வைத்து தபேலாவில் தாளமிட்டபடியே இளையராஜா ஓவியத்தை வரைந்து காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தாளத்தில் இசையின் ராஜா… இளையராஜாவை தத்துரூபமாக வரைந்த கோவை கலைஞர் – வீடியோ!#Coimbatore | #ilayaraja | @ilaiyaraaja pic.twitter.com/eQ7dinDDu2

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version