இலங்கை
நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு புதிய கட்டட திறப்பு விழா – சுகாதார அமைச்சர் வருகை
நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு புதிய கட்டட திறப்பு விழா – சுகாதார அமைச்சர் வருகை
நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு (OPD) கட்டடத்தின் திறப்பு விழா சனிக்கிழமை (12) காலை சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் க. இளங்குமரன், ஸ்ரீபவானந்தராசா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், கடந்த 10ஆம் திகதி இந்த கட்டடத் திறப்பு விழாவுக்கு முன்னதாக நடைபெற்ற சமய நிகழ்வுகளில் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குருக்கள் மற்றும் நாகதீப விகாரை விகாராதிபதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.