வணிகம்
பெர்சனல் லோனுக்கு அப்ளை பண்ண போறீங்களா? டாப் வங்கிகளின் வட்டி விகிதங்களை செக் பண்ணுங்க
பெர்சனல் லோனுக்கு அப்ளை பண்ண போறீங்களா? டாப் வங்கிகளின் வட்டி விகிதங்களை செக் பண்ணுங்க
இன்றைய சூழலில் தனிநபர் கடன் என்பது சிலருக்கு அத்தியாவசியமான தேவையாக மாறி இருக்கிறது. எதிர்பாராமல் ஏற்படும் செலவுகள், தவிர்க்க முடியாத பயணங்கள், மருத்துவ தேவைகள் என பல காரணங்களுக்காக மக்கள் தனி நபர் கடன்களை நாடுகின்றனர்.ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ விகிதங்களை குறைத்திருந்தாலும், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள், ஒவ்வொரு கடன் வழங்கும் நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றை பொறுத்து மாறுபடும். உங்கள் கிரெடிட் ஸ்கோர், வருமான நிலை, கடன் திருப்பி செலுத்தும் வரலாறு ஆகியவை உங்களுக்கான கடன் வழங்கும் வாய்ப்பு மற்றும் வட்டி விகிதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.அந்த வகையில், சமீபத்திய நிலவரப்படி முன்னணி வங்கிகளில் இருந்து வழங்கப்படும் பெர்சனல் லோனுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்க கட்டணங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். வங்கி பெயர்வட்டி விகிதம் (ஆண்டுக்கு)கடன் தொகைகாலம்செயலாக்கக் கட்டணம்ஆக்ஸிஸ் வங்கி9.99% – 22.00%ரூ. 40 லட்சம் வரை1–7 ஆண்டுகள்2% வரைஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா10.30% – 15.30%ரூ. 35 லட்சம் வரை1–7 ஆண்டுகள்1.5% வரை (ரூ. 1,000– ரூ. 15,000)ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி10.85% – 16.65%ரூ. 50 லட்சம் வரை1–6 ஆண்டுகள்2% வரைஹெச்.டி.எஃப்.சி வங்கி10.90% – 24.00%ரூ. 40 லட்சம் வரை1–5 ஆண்டுகள்ரூ. 6,500 வரைகோடக் மஹிந்திரா வங்கி10.99% – 16.99%ரூ. 35 லட்சம் வரை1–6 ஆண்டுகள்5% வரைகனரா வங்கி9.95% – 15.40%ரூ. 20 லட்சம் வரை1–7 ஆண்டுகள்0.25% வரை (அதிகபட்சம் ரூ. 2,500)யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா10.35% – 14.45%ரூ. 15-20 லட்சம் வரை1–7 ஆண்டுகள்1% வரை (அதிகபட்சம் ₹7,500)பேங்க் ஆஃப் பரோடா10.40% – 18.20%ரூ. 50 லட்சம் வரை1–7 ஆண்டுகள்2% வரை (அதிகபட்சம் ரூ. 10,000) இந்த வட்டி விகிதங்கள் அனைத்தும் ஒவ்வொரு நபரின் அளவுகோல்களுக்கு ஏற்ப மாறுபடும். எனவே, விண்ணப்பிக்கும் முன்பு முறையாக ஆராய்வது தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க உதவும்.