சினிமா
மரியஜீனா ஜான்சனின் மகளுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்.! வைரலாகும் போட்டோஸ்..
மரியஜீனா ஜான்சனின் மகளுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்.! வைரலாகும் போட்டோஸ்..
சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தராக பணியாற்றும் டாக்டர் மரியஜீனா ஜான்சன், தென்னிந்தியாவில் கல்வித் துறையில் முன்னணி நிலை வகிக்கும் ஒரு பெருமை மிக்க பெண் தலைவி.அவருடைய மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த இரவு சென்னையில் உள்ள ஒரு பிரமாண்ட திருமண மண்டபத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. அரசியல், திரைப்படம், கல்வி, தொழில்துறை என பல்வேறு துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.ஆனால் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது, த.வெ.க தலைவர், நடிகர் விஜய் நேரில் வந்தது தான். அவர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக வைரலாகி வருகின்றது.மரியஜீனா ஜான்சனின் மகளின் திருமண வரவேற்பில் விஜய்க்கு துணையாக, இன்னும் பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.