இலங்கை

யாழில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்

Published

on

யாழில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்

  யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இதன்போது 12 பயணிகள் 02 பணியாளர்கள் உட்பட 14 பேர் உயிராபத்து இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

Advertisement

நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சிறியரக சுற்றுலா படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளதுடன் இதன்போது பணியாளர்கள் உள்ளுர்சுற்றுலா பயணிகள் உட்பட 14 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பிராந்தியத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தென்பகுதியைச் சேர்ந்த 12 சுற்றுலா பயணிகள் நெடுந்தீவுக்கு சென்று குறிகாட்டுவான் திரும்பும் போதே இந்த அனர்த்தத்தினை எதிர்கொண்டுள்ளனர்.

Advertisement

குறித்த சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி சமிக்ஞையை அவதானித்த நெடுந்தீவு தனியார் படகு பணியாளர்கள் விரைந்து செயற்பட்ட நிலையில் படகில் இருந்த 12 பயணிகள் 02 பணியாளர்கள் உட்பட 14 பேர் உயிராபத்து இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

சேதமடைந்த படகில் இருந்து சகல சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாப்பாக தங்களின் படகிற்கு மாற்றியுள்ளனர்.

இதேவேளை குறித்த படகில் இருந்து உள்ளுர் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே படகு முழுமையாக கடல் நீரில் முழ்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version