பொழுதுபோக்கு

வசனம் எழுத திணறிய பாக்யராஜ்; 4 நாள் ஷுட்டிங் இல்ல: 5-வது நாளில் பார்த்திபன் சொன்ன யோசனை!

Published

on

வசனம் எழுத திணறிய பாக்யராஜ்; 4 நாள் ஷுட்டிங் இல்ல: 5-வது நாளில் பார்த்திபன் சொன்ன யோசனை!

தமிழ் சினிமாவில் சிறந்த திரைக்கதை எழுதும் திறன் கொண்டவர்கள் பட்டியலில் இயக்குநர் பாக்யராஜுக்கு சிறப்பிடம் இருக்கிறது. எளிமையான கதையை, தனது திரைக்கதை மூலம் வெற்றிபெற வைக்கும் ஆற்றல் கொண்டவர் பாக்யராஜ்.இதற்கு உதாரணமாக பல்வேறு திரைப்படங்களை கூறலாம். ‘முந்தானை முடிச்சு’, இது நம்ம ஆளு’, ‘அந்த 7 நாட்கள்’, ‘தூறல் நின்னு போச்சு’ போன்ற எத்தனையோ படங்களை நாம் எடுத்துக்காட்டாக கூற முடியும். அப்படிப்பட்ட பாக்யராஜுக்கு, ஒரு திரைப்படத்தின் காட்சியில் வசனம் எழுத சிரமமாக இந்த தருணம் குறித்து இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இயக்குநராவதற்கு முன்பாக பாக்யராஜிடம், பார்த்திபன் உதவி இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், ‘சின்னவீடு’ படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்தார்.அதன்படி, “பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘சின்னவீடு’ திரைப்படத்தின் படப்படிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது, வசனம் சரியாக வராத காரணத்தினால் சுமார் 4 நாட்களுக்கு படப்பிடிப்பு தடைபட்டது. இதற்காக பாக்யராஜும் தீவிர யோசனையில் இருந்தார்.கதைப்படி உடல் பருமனாக இருக்கும் மனைவியை, அவளது கணவன் ஏளனமாக பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இதற்கு, அந்த மனைவியின் சார்பில் ஒரு வசனம் பேச வேண்டும். ஆனால், அதற்கு சரியான வசனம் எழுத முடியாமல் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருந்தது.வசனங்களின் மன்னரான பாக்யராஜுக்கே இதற்கு வசனம் எழுத முடியாத ஒரு தடுமாற்றம் ஏற்பட்டது. அப்போது நான் ஒரு யோசனை கூறினேன். அதாவது, ‘தோளில் போடும் துண்டு மாதிரி ஒரு அழகான மனைவியாக நான் இல்லாவிட்டாலும், காலில் அணியும் செருப்பு போன்று உபயோகமான வேலைக்காரியாக கூட நான் இருக்க மாட்டேனா?’ என்ற வசனத்தை கூறினேன். இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த பாக்யராஜ், உடனடியாக இந்த வசனத்துடன் அக்காட்சியை படமாக்கினார்” என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version