சினிமா

‘வேட்டுவம்’ படப்பிடிப்பில் நிகழ்ந்த சோகமான சம்பவம்.! அதிர்ச்சியில் இயக்குநர் பா. ரஞ்சித்.!

Published

on

‘வேட்டுவம்’ படப்பிடிப்பில் நிகழ்ந்த சோகமான சம்பவம்.! அதிர்ச்சியில் இயக்குநர் பா. ரஞ்சித்.!

தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அதன்போது, ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் திடீரென உயிரிழந்த செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.சினிமா ஒரு கலை மட்டுமல்ல; உயிரோடும் நேர்மையோடும் பணிபுரியும் தொழில். அத்தகைய தொழிலில் உயிரையே பறிகொடுத்த வேதனையான சம்பவம் இது. இச்சம்பவம் நாகை மாவட்டத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் முக்கியமான car stunt sequence-இல் நிகழ்ந்தது.ஸ்டண்ட் காட்சிக்கான பயிற்சி நடந்தபோது, காரில் இருந்து குதிக்கும் காட்சி நடிப்பதற்காக தயாரான ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ், காரிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, நாகை காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version