இலங்கை
இந்தியாவுக்கான வரியும் இலங்கையைத் தாக்கும்! ஐ.ம.சக்தி சுட்டிக்காட்டு
இந்தியாவுக்கான வரியும் இலங்கையைத் தாக்கும்! ஐ.ம.சக்தி சுட்டிக்காட்டு
இந்தியாவுக்கு எந்தளவு வரி அறிவிக்கப்படவுள்ளது என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இந்தியாவுக்கு விதிக்கப்படும் வரியும் எமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
அமெரிக்காவினால் இலங்கைக்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளுக்கு 20 சதவீதம் மாத்திரமே வரி விதிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி மலேசியா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஆடை உள்ளிட்ட ஏற்றுமதிகளுக்கான கேள்வி வீழ்ச்சியடையும். 44 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ள போதிலும் பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் எம்மைவிடக் குறைவான வரி வீதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமையால் அது அமெரிக்க ஏற்றுமதி சந்தையில் எமக்கு சவாலாக அமையும். இந்தியாவுக்கு விதிக்கப்படும் வரியும் எமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த விவகாரத்தில் முழுநாடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது – என்றார்.