இலங்கை
இலங்கை – இந்தியா இடையே எரிபொருள் விநியோகக்குழாய்
இலங்கை – இந்தியா இடையே எரிபொருள் விநியோகக்குழாய்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே 600 மீற்றர் நீளமுடைய எரிபொருள் விநியோகக் குழாய் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருகோணமலைத்துறை முகத்தை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிலிருந்து திருகோணமலைத்துறை முகம் வரை கடலுக்கு அடியில் எரிபொருள் விநியோகக் குழாய் ஒன்றை அமைக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனா எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அதையடுத்து, இந்தியா கடலுக்கு அடியில் எரிபொருள் விநியோகக் குழாயை அமைக்கத் திட்டமிட்டுள்ளது என்று இந்தியத் தகவல்கள் கூறுகின்றன.