சினிமா
“உசுரே” இசை வெளியீட்டு விழா இன்று…! இசையின் பேரின்பத்தில் ரசிகர்கள்…!
“உசுரே” இசை வெளியீட்டு விழா இன்று…! இசையின் பேரின்பத்தில் ரசிகர்கள்…!
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஜனனி. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், விஜய் நடித்த லியோ படத்தில் முக்கியக் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். தற்போது, நடிகை ஜனனி கதாநாயகியாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘உசுரே’ஆகஸ்ட் 1ஆம் திகதி வெளியாகவுள்ளது. இன்று நடைபெற்ற ‘உசுரே’ இசை வெளியீட்டு விழா மிக விமர்சையாக நடைபெற்றுள்ளது. விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இசை வெளியீட்டில் ஜனனியின் தோற்றமும், தனுஷுடன் மேடையில் பகிர்ந்த காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.புதுமையும் உணர்வுகளும் நிரம்பிய ஒரு புதிய படைப்பு தமிழ் திரையுலகிற்கு வரவிருப்பதாக தெரிவிக்கின்ற ‘உசுரே’ திரைப்படம், அறிமுக இயக்குநர் நவீன் டி. கோபால் இயக்கத்தில் உருவாகியுள்ளது. கதையின் மையமாக உணர்வுப்பூர்வமான மனித உறவுகள் அமைந்துள்ளன என படக்குழு தெரிவித்துள்ளது.இத்திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் கிரண் ஜோஸ். அவரது இசை, படத்திற்கே தனி அழகையும், உணர்வுகளுக்கும் பசுமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ‘உசுரே’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படவுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் இத்திரைப்படம், தமிழ் சினிமாவின் புதிய பரிணாமங்களை பிரதிபலிக்கிறது என்பது உறுதி.