இலங்கை

எல்லைநிர்ணயத் தீர்வின்பின்பே மாகாணசபைத் தேர்தல் நடக்கும்; அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவிப்பு

Published

on

எல்லைநிர்ணயத் தீர்வின்பின்பே மாகாணசபைத் தேர்தல் நடக்கும்; அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவிப்பு

நிர்ணயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அதன் பின்னரே மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள், பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் குறித்து வினவிய போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
உள்ளூராட்சிமன்ற சபைகளை நியமிக்கும் பணிகள் நிறைவடைந்ததும். மாகாணசபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். மாகாண சபைத்தேர்தலை புதிய தேர்தல் முறைமையில் நடத்துவதா அல்லது பழைய தேர்தல் முறைமையில் நடத்துவதா என்பதில் சிக்கல் காணப்படுகிறது. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் எல்லை நிர்ணய பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். இவ்விடயத்தில் முரண்பாடற்ற வகையில் தீர்வு காண்பது அத்தியாவசியமானது. அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் தொடர்ந்து இயங்குவது ஜனநாயக முறைமைக்குப் பொருத்தமானதாக அமையாது – என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version