சினிமா

கண் தானம் மூலம் மறைந்தும் மறையாமல் வாழவுள்ள சரோஜா தேவி..! வைரலான தகவல்கள்..

Published

on

கண் தானம் மூலம் மறைந்தும் மறையாமல் வாழவுள்ள சரோஜா தேவி..! வைரலான தகவல்கள்..

தென்னிந்திய சினிமாவின் பொற்கால நடிகையாக திகழ்ந்த சரோஜா தேவி இன்று தனது, 87வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துப் பாராட்டுகளை பெற்றவர். இவரது மறைவு இந்திய சினிமா உலகையே துக்கத்தில் ஆழ்த்தியிருந்தது.இந்நிலையில், அவரது குடும்பத்தினர் எடுத்த முக்கியமான முடிவு ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதாவது, மறைந்த சரோஜா தேவியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.சரோஜா தேவி பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வால் உயிரிழந்தார். உடல்நிலையை உறுதி செய்த மருத்துவர்கள், நேரத்தை விலக்காமல், குடும்பத்தினரிடம் கண் தானம் குறித்து ஆலோசனை நடத்தினர்.அதற்கேற்ப, பெங்களூரின் பிரபல தனியார் மருத்துவமனையிலிருந்து ஒரு குழு மருத்தவர்கள் நேரில் வந்து, அவரது கண்களை பெறும் பணியை சீராக மேற்கொண்டனர். இந்த நடவடிக்கை மிகவும் குறுகிய நேரத்திலேயே நிகழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version