சினிமா
குடும்பத்தில் 3 இன்ஜினியர்..28 வயதில் கோடிகளில் புறளும் வளர்ந்து வரும் நடிகை…
குடும்பத்தில் 3 இன்ஜினியர்..28 வயதில் கோடிகளில் புறளும் வளர்ந்து வரும் நடிகை…
பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஷர்வாரி வாக், மும்பையில் ஒரு மராத்தி குடும்பத்தில் இருந்து வந்தவர். அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஷர்வாரி வாக்கின் தாத்தா மனோகர் ஜோஷி மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சராக இருந்திருக்கிறார்.ஷர்வாரியின் தந்தை ஷைலேஷ் வாக் மும்பையில் நன்று அறியப்பட்ட கட்டிடக் கலைஞராகவும் தாய் நம்ரதா வாக் ஒரு கட்டிடக் கலைஞராகவும் சகோதரி கஸ்தூரியும் கட்டிடக் கலைஞராக இருந்து வருகிறார்கள். அவர்களது குடும்பத்தில் ஷர்வாரி வாக் மட்டும் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.2020ல் கபீர் கானின் தி ஃபார்காட்டன் ஆர்மி என்ற வெப்சீரிஸில் நடிக்க ஆரம்பித்து 2021ல் பன்டி அவுர் பாப்லி 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகினார்.இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த ஷர்வாரி வாக்கின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ. 1.50 கோடியாம். நடிப்பை தாண்டி, பாண்ட்ஸ் அண்ட் ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் போன்ற சில தொலைக்காட்சி விளம்பரங்களிலும் தோன்றியிருக்கிறார், அதற்காகவும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கியிருக்கிறார் ஷர்வாரி வாக்.வேதா படத்திற்காக ரூ. 50 லட்சம் சம்பளமாக பெற்று வளர்ந்து வரும் நடிகையாக பாலிவுட்டில் திகழ்ந்து வருகிறார் ஷர்வாரி வாக்.