இலங்கை
சிறுபோக அறுவடை வவுனியாவில் ஆரம்பம்!
சிறுபோக அறுவடை வவுனியாவில் ஆரம்பம்!
வவுனியாவில் சிறுபோக அறுவடை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோகச் செய்கையின் அளவை விட இம்முறை ஐயாயிரம் ஏக்கர் அளவில் மேலதிகமாக சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் இம்முறை 21 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற் செய்கை முன்னெடுக்கப்பட்டது.
தற்போது வரை 30 வீதமான நெல் அறுவடை முடிவடைந்துள்ளது. இதேவேளை அரசாங்கத்தினால் நெற்கொள்வனவுக்கான நிர்ணய விலை அறிவிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் நெற்கொள்வனவு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.வவுனியா மாவட்டத்திலும் நெற்கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.