இலங்கை
சீதவாக்கை விவகாரம் தொடர்பிலான மனு தள்ளுபடி
சீதவாக்கை விவகாரம் தொடர்பிலான மனு தள்ளுபடி
சீதவாக்கை பிரதேச சபைக்கு தலைவர் மற்றும் பிரதித்தலைவரை தெரிவு செய்யும் முறை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காமல் தள்ளுபடி செய்துள்ளது.
இரகசிய வாக்கெடுப்பை தடுக்க வேண்டும் , திறந்த வாக்களிப்பை கட்டாயமாக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையே மேல்முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை (14) தள்ளுபடி செய்துள்ளது.
பிரதேச சபையின் ஆரம்ப அமர்வின் போது தலைவர் மற்றும் பிரதித்தலைவரை தெரிவு செய்வதற்காக திறந்த வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என 24 உறுப்பினர்கள் எழுத்து மூல வேண்டுகோளை விடுத்திருந்தனர்.
எனினும் மேல்மாகாண ஆணையாளர் இந்த வேண்டுகோளை புறக்கணித்து இரகசிய வாக்கெடுப்பை நடத்தினார்.
ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்கட்சிகள் இந்த நடவடிக்கை பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன் அமர்வை புறக்கணித்து வெளிநடப்பு செய்திருந்தன.
வெளிநடப்புக்குப் பின்னர் கோரம் இல்லாததால் சீதாவாக்கை பிரதேச சபை தலைவர் மற்றும் பிரதித்தலைவரைத் தேர்ந்தெடுக்காவில்லை.
சமை அமர்வும் ஒத்திவைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மேல்மாகாண ஆளுநரின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திறந்த வாக்களிப்பை கட்டாயமாக்க வேண்டும் என கோரியும் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவே, விசாரணைக்கு எடுக்காமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.