இலங்கை
ஜனாதிபதி செயலக வாகனச்செலவு பத்தாண்டுகளில் 5.7 பில்லியன்
ஜனாதிபதி செயலக வாகனச்செலவு பத்தாண்டுகளில் 5.7 பில்லியன்
ஜனாதிபதி செயலகம், கடந்த பத்து ஆண்டுகளில் வாகனச் செலவுகளுக்காக 5.7 பில்லியனுக்கும் அதிகமான ரூபாவைச் செலவிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
2012 முதல் 2022 வரையிலான பத்து ஆண்டு காலப்பகுதியில். மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகிய ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலங்களில் இந்தச் செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாகனப் பராமரிப்பு, மேம்படுத்தல்கள், புதிய கொள்வனவுகள் மற்றும் குத்தகை வாகனங்களுக்கான தவணைக் கட்டணங்கள் என ஜனாதிபதி செயலகம் மொத்தம் 5.7 பில்லியன் ரூபாவுக்கும் மேல் செலவிட்டுள்ளது.
தகவல் அறியும் சட்டத்தின்கீழ் ஜனாதிபதி செயலகத்தின் 2012-2022 காலப்பகுதிக்கான பொது நிர்வாகச் செலவுகள் குறித்த தகவற்கோப்பின் மூலம் இத்தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.