இலங்கை

டெங்கு அபாயம் : ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்களின் தோல்களை அப்புறப்படுத்துவதில் கவனம் தேவை – வைத்தியர் எச்சரிக்கை

Published

on

டெங்கு அபாயம் : ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்களின் தோல்களை அப்புறப்படுத்துவதில் கவனம் தேவை – வைத்தியர் எச்சரிக்கை

தற்போதைய பருவ காலத்தில் அதிகமாக கிடைக்கும் ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களின் தோல்கள் டெங்கு நோய்க்கான நுளம்புகள் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழலை உருவாக்கக்கூடும் என பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இத்துடன், பலர் இந்த பழங்களின் தோல்களை வீதியோரங்களிலும், வீடுகளின் வெவ்வேறு இடங்களிலும் வீசுவதால், அவை, டெங்கு நுளம்பு இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதால், குறித்த பழங்களின் தோல்களை அப்புறப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு வைத்தியர் தீபால் பெரேரா வேண்டுகோள் வைத்துள்ளார்.

Advertisement

டெங்கு நுளம்புகள், இனப்பெருக்கம் செய்ய மங்குஸ்தான், ரம்புட்டான் ஆகியவற்றின் பழத்தோல்கள் போன்ற குறைந்த அளவிலான நீர்தேங்கும் இடம் போதுமானது என்பதால், அவை டெங்கு நுளம்புகள் பெருக உகந்த இடமாக அமையும் என வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version