பொழுதுபோக்கு

தகப்பன் ஸ்தானம்…‌ரொம்ப மிஸ் பண்றேன்; அவருக்காக தான் மதகஜராஜா: மணிவண்ணன் பற்றி மனம் திறந்த சுந்தர்.சி

Published

on

தகப்பன் ஸ்தானம்…‌ரொம்ப மிஸ் பண்றேன்; அவருக்காக தான் மதகஜராஜா: மணிவண்ணன் பற்றி மனம் திறந்த சுந்தர்.சி

திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி, மறைந்த இயக்குநர் மணிவண்ணன் உடனான தனது ஆழமான உறவு குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். மணிவண்ணனை ஒரு வழிகாட்டியாகவும், தந்தைக்குச் சமமானவராகவும் தான் கருதுவதாக சுந்தர்.சி பிஹைன்வுட்ஸ்க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகர் மணிவண்ணன் இடையே குரு-சிஷ்யன் உறவுதான் இருந்தது. சுந்தர் சி தனது சினிமா வாழ்க்கையை மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகத் தொடங்கினார். மணிவண்ணன் இயக்கிய “அமைதிப்படை” படத்தில் சுந்தர் சி உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.அதன் பிறகு, 1995 ஆம் ஆண்டு “முறை மாமன்” என்ற படத்தின் மூலம் சுந்தர் சி இயக்குநராக அறிமுகமானார். அங்கிருந்தே அவர்கள் இருவரின் நட்பும் நீடித்தது. இந்நிலையில் சுந்தர் சி மறைந்த மணிவண்ணன் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். “கிட்டத்தட்ட எனக்கு ஒரு தகப்பன் ஸ்தானம் அவரு. நான் இன்னைக்கு சாப்பிடுற ஒவ்வொரு பருக்கையும் வந்து அவரு எனக்கு கத்து கொடுத்த வித்தையினாலதான்” என்று மணிவண்ணன் தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தை உருக்கமாக சுந்தர் சி வெளிப்படுத்தினார்.மணிவண்ணனின் மறைவு ஒரு மிகப்பெரிய இழப்பு என்று குறிப்பிட்ட சுந்தர்.சி, ‘மதகஜராஜா’ படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.சில வருடங்களாக இருவரும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்காத நிலையில், திடீரென மணிவண்ணன், “டேய் அவுட்டர் போறேன்னா சொல்லு நானும் வரேன், வெளியூர் போலாம்னு இருக்கேன், ரொம்ப நாள் ஆச்சு, நான் சும்மா கூட வரேன்” என்று அழைத்தாராம்.மணிவண்ணனுக்காகவே ‘மதகஜராஜா’ படத்தில் ஒரு ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்தை சுந்தர்.சி உருவாக்கினார். கதைப்படி அந்த கதாபாத்திரம் அவசியம் இல்லாத நிலையிலும், மணிவண்ணன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே ஜெய்ப்பூர் படப்பிடிப்புக்கு அவரை அழைத்துச் சென்றதாக சுந்தர்.சி தெரிவித்தார்.”அவருக்காக அந்த கேரக்டர் கிரியேட் பண்ணிதான் அந்த ஜெய்ப்பூர் ஷூட்டிங் போனோம். அது உள்ள ஆட்டோ டிரைவர் வரணும்னு அவசியமே இல்லை. பட் இவருக்காக அந்த ஆட்டோ டிரைவர் கேரக்டரா மணிவண்ணன் சார் உள்ள வருவாரு” என்று அவர் கூறினார்.அதுவே மணிவண்ணனுடன் இணைந்து கடைசியாகப் பணியாற்றிய அனுபவம் என்றும், சில நாட்களிலேயே அவர் மறைந்துவிட்டதாகவும் சுந்தர்.சி வருத்தத்துடன் தெரிவித்தார். மணிவண்ணனின் இழப்பு தனக்கு ஒரு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் சுந்தர்.சி மனம் திறந்து பேசினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version