பொழுதுபோக்கு

தமிழனாக என்னை மாற்றியது இந்த இயக்குனர் தான்; தமிழின் பெருமை சொன்ன நடிகர் மாதவன்!

Published

on

தமிழனாக என்னை மாற்றியது இந்த இயக்குனர் தான்; தமிழின் பெருமை சொன்ன நடிகர் மாதவன்!

இயக்குநர் சீமானுடன் பணியாற்றிய தனது அனுபவத்தை நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தன்னை தமிழனாக மாற்றியது இயக்குநர் சீமான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் எவர்க்ரீன் சாக்லேட் பாயாக வலம் வருபவர் மாதவன். மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான இவர், அதன் பின்னர் எத்தனையோ திரைப்படங்களில் நடித்துள்ளார்.அவரது நடிப்பில் வெளியான டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், ரன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. ஆயுத எழுத்து திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த பாத்திரம், இவரது மற்றொரு பரினாமத்தை வெளிப்படுத்தியது.தமிழ் மட்டுமின்றி ஏராளமான இந்தி திரைப்படங்களிலும் மாதவன் நடித்துள்ளார். த்ரீ இடியட்ஸ் போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. இதைத் தொடர்ந்து, படங்களில் இருந்து சிறிய இடைவெளி எடுத்த மாதவன், இயக்குநர் சுதா கொங்காராவின் இறுதிச்சுற்று படத்தின் மூலம் கம்பெக் கொடுத்தார்.மாதவனின் திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான திரைப்படம் தம்பி என்று கூறலாம். சீமான் இயக்கத்தில் வெளியான இப்படத்தில், முற்றிலும் ஆக்‌ஷன் ஹீரோவாக மாதவன் நடித்தார்.அரசியல் களத்தில் தன்னை தமிழ் மொழியின் தீவிர பற்றாளராக நிலைநிறுத்திய சீமான், திரைத்துறையிலும் அதே பாணியை கையாண்டார் என்று பலர் கூறியுள்ளனர். இந்நிலையில், நடிகர் மாதவனும், சீமானுடன் பணியாற்றிய தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, தன்னை தமிழனாக மாற்றியதே சீமான் தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.அதன்படி, “சில விஷயங்களில் தமிழர்கள் வித்தியாசமானாவர்கள். அன்பு காட்டுவதில் தமிழர்கள் தனித்துவமானவர்கள். அண்ணனாகவோ அல்லது தம்பியாகவோ ஒரு நபரை உடனடியாக ஏற்றுக் கொள்வார்கள்.கூச்சத்தை மீறி மிகவும் இயல்பாக பேசக் கூடிய ஆற்றல் தமிழர்களிடம் இருக்கிறது. வீட்டில் வளர்க்கும் நாயை கூட தமிழர்கள் மரியாதையோடு நடத்துவார்கள். ஒரு தமிழனாக மாறி, அதன் கலாசாரத்தை நான் கற்றுக் கொண்டதற்கு இயக்குநர் சீமான் முக்கிய காரணம். இதற்காக அவருக்கு நான் நன்றி கூற வேண்டும்” என்று மாதவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version