இந்தியா
திருச்சி முகாமில் தொடரும் ஈழத்தமிழனின் உண்ணாவிரத போராட்டம் – தமிழீழ அரசாங்கம் தமிழக முதல்வருக்கு அவசர கடிதம்!
திருச்சி முகாமில் தொடரும் ஈழத்தமிழனின் உண்ணாவிரத போராட்டம் – தமிழீழ அரசாங்கம் தமிழக முதல்வருக்கு அவசர கடிதம்!
திருச்சி சிறப்பு முகாமில் காலவரையரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ள ஈழத்தமிழ் மகன் நவநாதன் யோகராசாவை சந்தித்து நீராகாரம் வழங்கும்படி தமிழக முதல்வர் மற்றும் கட்சித் தலைவர்களை கடிதம் மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் ஈழத்தமிழ் மகன் நவநாதன் யோகராசா 5 கோரிக்கைகளை முன்வைத்து நீர் ஆகாரம் எதுவும் உட்கொள்ளாது இம்மாதம் 5ஆம் திகதியில் இருந்து காலவரையரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
1- 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இனப்படுகொலை நடந்தது எனவும், சர்வதேச பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், ஈழத்தமிழர்களின் ஒரே தீர்வு தனி ஈழம் என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
2-தமிழ்நாட்டில் இருந்து ஈழ அகதிகளை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பக்கூடாது.
3-தமிழ்நாட்டில் இருந்து ஈழத்தமிழர்களை அரசியல் வேலைகள் செய்வதற்கு சட்டத்திற்கு உட்பட்டு அனுமதிக்க வேண்டும்.
4-தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களை இங்கு குடியுரிமை வழங்க அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டும்.
5-முன்னாள் விடுதலைப் புலிகள் என்னும் சந்தேகத்தின் பெயரில் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பவர்களுக்கு இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருக்கும் ஈழத்தமிழர்களை சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ்நாட்டில் வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும் அல்லது அவர்கள் விரும்பிய நாட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும். என்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
தயவுசெய்து திருச்சி சிறப்பு முகாமிற்கு உடனடியாக சென்று அவருக்கு நீராகாரம் வழங்கும்படி தமிழக முதல்வர் மற்றும் கட்சித் தலைவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.