இலங்கை

நடைபாதை கடைகள் அகற்றம் : போலீஸ் இராணுவம் குவிப்பு – வவுனியாவில் பதற்றம்

Published

on

நடைபாதை கடைகள் அகற்றம் : போலீஸ் இராணுவம் குவிப்பு – வவுனியாவில் பதற்றம்

நடைபாதைகளில் கடைகள் வவுனியா நகரில் நீண்டகாலமாக இருந்துவரும் பிரச்சினையாகும் குறிப்பாக இலுப்பையடிச்சந்தி, ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் பொது சந்தையை அண்மித்த பகுதிகளில் இவ்வாறான கடைகளை அகற்றி புதிய இடத்தில் அமைக்குமாறு ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தமிழரசு கட்சியின் கூட்டு மாநகர அரசு சார்பில் இன்று இக்கடைகளை பலவந்தமாக அகற்ற முற்பட்டபோது அங்கிருந்த வியாபாரிகளுக்கும் அகற்ற முற்பட்ட குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

மேலும் அப்பகுதியில் கடைகளை பலவந்தமாக அகற்ற வேண்டாம் தமக்கு உரிய இடத்தில் தமக்கு ஏற்றவகையில் கடைகளை அமைக்க சீரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளால் ஒன்றிணைந்த போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. 

அத்துடன் மாற்றிடம் வழங்குப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட இடமானது வியாபாரஸ்தலத்துக்கு ஏற்புடையதாக இல்லை எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன்போது  நிலைமை
கலவரமாக மாறியதால், பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு படையினரும் இவ்விடத்தில் களமிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version