பொழுதுபோக்கு
நான் லண்டன் போறேன், உங்களுக்கு ஏதாவது வேணுமா? என்னை கேட்ட முதல் ஹீரோ அவர்தான்: விஜய் குறித்து ரம்பா பேச்சு!
நான் லண்டன் போறேன், உங்களுக்கு ஏதாவது வேணுமா? என்னை கேட்ட முதல் ஹீரோ அவர்தான்: விஜய் குறித்து ரம்பா பேச்சு!
நடிகை ரம்பா, தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த ‘நினைத்தேன் வந்தாய்’ திரைப்படம் குறித்து தனது சுவாரஸ்யமான அனுபவங்களை திரைபட நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.இந்தப் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்திற்கு, ரம்பா கனவில் மட்டுமே வந்து செல்லும் ஒருவராகவும், அவரைப் பார்ப்பதற்காக விஜய் காத்திருக்கும் காட்சிகளும் அமைந்திருக்கும்.இந்த படபிடிப்பின்போது இருவரும் சந்தித்த நிலையில் விஜய் ரம்பாவிடம் நீங்கள் எப்போ எந்த சூட்டிங்கில் இருக்கிறீர்கள்? என்ன படம் என்று எல்லாம் கேளிக்கையாக விசாரித்து நகைச்சுவையக பேசுவாராம். இதுகுறித்து ரம்பா சுவாரசியமாக பகி்ர்ந்துள்ளார். நினைத்தேன் வந்தாய் திரைப்படம் 1998 ஆம் ஆண்டு செல்வபாரதி இயக்கத்தில் வெளியானது. இதில் விஜய், ரம்பா, தேவையானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். “அந்தப் படத்தில் விஜய் சார் கனவு கண்டுகொண்டே இருப்பார். நான் எங்கேயோ தொங்கிக் கொண்டிருப்பேன், அவர் எங்கேயோ ஆடி கொண்டிருப்பார். அவர் என்னைப் பார்த்து, ‘என்னங்க, எங்க ஆடுறீங்க? இப்போ எந்த ஷூட்டிங்கில் இருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்பார்.நான் அவரிடம், ‘சார், நான் உங்களோடு தான் முதுமலை காட்டில் டூயட் ஆடிக்கொண்டிருக்கிறேன். அதற்கு விஜய், நானும் உங்களோடுதான் விஜய் டான்ஸில் டூயட் ஆடிக் கொண்டிருக்கிறேன்’ என்று சொல்வார்,” என சிரிப்புடன் ரம்பா நினைவுகூர்ந்தார்.மேலும், தனது திரையுலக வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு கதாநாயகன், “நான் லண்டன் போகிறேன், உங்களுக்கு ஏதாவது வேண்டுமா? உங்களுக்கு ஏதாவது வாங்க வேண்டுமா என்று சொல்லுங்கள், நான் வாங்கிட்டு வருகிறேன்,” என்று கேட்டதாகவும் ரம்பா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். “அவர் மிகவும் பணிவானவர். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்,” என்றும் ரம்பா குறிப்பிட்டிருந்தார்.விஜய் மற்றும் ரம்பா ஜோடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால், நினைத்தேன் வந்தாய் படத்திற்குப் பிறகு, 1999 ஆம் ஆண்டிலேயே என்றென்றும் காதல் மற்றும் மின்சார கண்ணா ஆகிய இரண்டு படங்களிலும் இணைந்து நடித்தனர்.மின்சார கண்ணா படத்தில் இடம்பெற்ற “ஊதா ஊதா ஊதாப்பூ” பாடல், விஜய் மற்றும் ரம்பாவின் நடனத்திற்காக மிகவும் பிரபலமானது. இந்த பாடல் இன்றும் அவர்களின் காம்போவை நினைவுகூரும் வகையில் உள்ளது.விஜய் மற்றும் ரம்பா ஜோடி 90களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அவர்களின் கெமிஸ்ட்ரி மற்றும் நடனம் படங்களுக்கு பெரிய பலமாக அமைந்தன. அதனால்தான், நினைத்தேன் வந்தாய் படத்திற்குப் பிறகு உடனடியாக அடுத்த வருடமே 1999-ல் என்றென்றும் காதல் மற்றும் மின்சார கண்ணா என இரண்டு படங்களில் மீண்டும் இணைந்தனர்.