பொழுதுபோக்கு
பாடல் காட்சிக்கு டான்ஸ்; 6 இன்ச் ஹீல்ஸ் போட்டு ஆடிய ரம்பா; எந்த படம் தெரியுமா?
பாடல் காட்சிக்கு டான்ஸ்; 6 இன்ச் ஹீல்ஸ் போட்டு ஆடிய ரம்பா; எந்த படம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மோஸ்ட் வான்டட் ஹீரோவாக வலம் வந்தவர் பிரசாந்த். பாலுமகேந்திரா, ஆர்.கே. செல்வமணி, மணிரத்னம், ஷங்கர் என முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் பிரசாந்திற்கு இருக்கிறது.’வண்ண வண்ண பூக்கள்’, ‘திருடா திருடா’, ‘ஜீன்ஸ்’, ‘கண்ணெதிரே தோன்றினால்’ போன்ற படங்கள் இவரது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றன. அன்றைய சூழலில் நிறைய ரசிகைகளை கொண்ட சாக்லேட் பாயாக பிரசாந்த் வலம் வந்தார்.இதன் பின்னர், ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால், சில படங்களில் மட்டுமே பிரசாந்த் நடித்தார். அண்மையில் அவரது நடிப்பில் வெளியான ‘அந்தகன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இதேபோல், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. ‘அழகிய லைலா-வான ரம்பாவிற்கு’, 90ஸ்-களில் தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. இன்றளவும் கூட பலருக்கும் பிடித்தமான நடிகையாக ரம்பா திகழ்கிறார். அப்போதைய காலகட்டத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்த பெருமை ரம்பாவிற்கு இருக்கிறது. ரம்பாவின் தனிச் சிறப்பே நகைச்சுவையான நடிப்பை வெளிப்படுத்துவது தான். குறிப்பாக, சுந்தர். சி இயக்கத்தில் கார்த்திக், கவுண்டமணி, மணிவண்ணன் உள்ளிட்டோருடன் ரம்பா நடித்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படம் இவரது கலைப்பயணத்தில் பெரும் வெற்றியை பெற்றது. தற்போதும் கூட பலருக்கும் விருப்பமான நடிகையாக ரம்பா திகழ்கிறார்.கமல்ஹாசனுடன் ‘காதலா, காதலா’, ரஜினிகாந்துடன் ‘அருணாச்சலம்’, விஜய்யுடன் ‘நினைத்தேன் வந்தாய்’, ‘மின்சார கண்ணா’ உள்ளிட்ட படங்களிலும் நடிகை ரம்பாவின் நடிப்பு பேசப்பட்டது. அந்த வகையில், பிரசாந்த மற்றும் ரம்பா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘பூ மகள் ஊர்வலம்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்று கூறலாம்.இந்நிலையில், நடிகை குஷ்பூ உடனான ஒரு நேர்காணலின் போது ரம்பாவுடன் இணைந்து பணியாற்றியதை நடிகர் பிரசாந்த் நினைவு கூர்ந்தார். அப்போது, “ரம்பா பெரும்பாலும் ஹீல்ஸ் போட்டு தான் நடனமாடுவார். குறிப்பாக, சுமார் 6 இன்ச் ஹீல்ஸ் தான் ரம்பா போட்டிருப்பார். அதிலும், கடற்கரையில் படமாக்கப்பட்ட பாடல் காட்சியில் அந்த ஹீல்ஸ் அணிந்து நடனமாடினார். இதனால் எங்களுக்கே கஷ்டமாக இருந்தது” என்று நடிகர் பிரசாந்த் வேடிக்கையாக கூறியுள்ளார்.