இலங்கை
பிளவடையும் சஜித் தரப்பு
பிளவடையும் சஜித் தரப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்பதவிகளில் மாற்றம் அவசியம் என அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும், தொகுதி அமைப்பாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சஜித் பிரேமதாஸ தலைமையில் இரு ஜனாதிபதித் தேர்தல்கள், இரு பொதுத்தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சிசபைத் தேர்தல் என ஐந்து தேர்தல்களில் தோல்வி ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொகுதி மற்றும் பிரதேச அமைப்பாளர்களை மாத்திரம் மாற்றிப் பயனில்லை எனவும், கட்சி உயர்மட்டத்தில் மறுசீரமைப்பு அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தலைமைப் பதவி மாறாவிட்டாலும் செயலாளர், தவிசாளர், தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் மாற்றம் அவசியம் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.