இலங்கை

புலிகளின்குரல் முதல் செய்திய்திக்கு குரல் கொடுத்த சத்தியா உயிரிழப்பு!

Published

on

புலிகளின்குரல் முதல் செய்திய்திக்கு குரல் கொடுத்த சத்தியா உயிரிழப்பு!

புலிகளின்குரல் வானொலியின் பிரபல அறிவிப்பாளராக செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார். 1990 ஆம் ஆண்டில் புலிகளின்குரல் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகிய பொழுது “புலிகளின்குரல் செய்திகள் வாசிப்பவர் சத்தியா” என்று செய்தி வாசித்தவர் அவர்.

புலிகளின்குரல் வானொலியில் செய்தி ஆசிரியராகவும் செய்தி வாசிப்பாளராகவும் 2003 ஆம் ஆண்டு வரையில் செயற்பட்டிருந்தார். அவருடைய செய்தி வாசிப்புப் பாணியை வைத்து செய்தியின் கனதி தொடர்பில் மக்கள் உணரக்கூடிய அளவிற்கு அவருடைய அறிவிப்பு தனித்துவம் பெற்றிருந்தது.

Advertisement

நிதர்சனம் நிறுவனத்தில் மாதாந்தம் வெளியாகிய ஒளிவீச்சு காணொளிச் சஞ்சிகையில் தொடர்ந்து மாதாந்தம் இடம்பெற்ற “சமகாலப் பார்வை” என்ற நிகழ்ச்சிக்கான குரல் வழங்குபவராக நீண்டகாலமாக செயற்பட்டார். நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தலைவர் அவர்களின் நேர்காணலுடன் ஒளிபரப்பாகிய “விடுதலைத் தீப்பொறி” எனும்நிகழ்ச்சியின் குரல் வழங்குநராக செயற்பட்டார். 

தலைவர் அவர்களின் 50 ஆவது பிறந்தநாளை ஒட்டி நிதர்சனம் நிறுவனம் தயாரித்த “தலைநிமிர்வு 50” என்ற ஆவணப்படம் உட்பட்ட ஏராளமான ஆவண வெளியீடுகளின் பிரதான குரல் தொகுப்பாளராக புகழ்பெற்றிருந்தார்.

இடப்பெயர்வுக்கு முன்னர், நிதர்சனம் நிறுவனத்தினரை யாழ்ப்பாணத்தில் இரண்டு சந்தர்ப்பங்களிலும் பின்னர் முள்ளியவளையில் புலிகளின்குரல் வானொலி செயற்பட்ட 1998 ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் தலைவர் அவர்களால் மதிப்பளிப்பளிக்கப்பட்டார்.

Advertisement

புலிகளின்குரல் வானொலியில் ஒலிபரப்பாகிய வரலாற்றுத் தொடரான “காலச்சக்கரம்” என்ற நிகழ்ச்சியை எழுதித் தயாரித்து மறைந்த கலைஞர் சங்கநாதன் அவர்களுடன் இணைந்து குரல் வழங்கியிருந்தார்.

விவசாயம் சார்ந்த கருப்பொருளை உள்ளடக்கிய “மண்முற்றம்” என்ற நிகழ்ச்சியை எழுதித் தயாரித்து அதில் குரல் வழங்கியுமிருந்தார்.

மக்களின் குரலாக ஒலித்த “ஊர் சுற்றும் ஒலிவாங்கி” என்ற நேர்காணல் நிகழ்ச்சியை புலிகளின்குரல் வானொலியில் தயாரித்திருந்தார். 2003 ஆண்டிலிருந்து ஊடகத்துறையிலிருந்து ஒதுங்கிய அவர் ஆங்கில பகுதி நேர ஆசிரியராகவும் பின்னர் ஆசிரியராகவும் செயற்பட்டுவந்திருந்தார்.

Advertisement

அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்திருந்தார். இந்நிலையில் மாரடைப்பால் இன்று காலமானார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version