சினிமா
பொற்கால நடிகை சரோஜா தேவி மறைவு.!– திரையுலக பிரபலங்களின் இரங்கல் பதிவுகள் வைரல்!
பொற்கால நடிகை சரோஜா தேவி மறைவு.!– திரையுலக பிரபலங்களின் இரங்கல் பதிவுகள் வைரல்!
தமிழ்த் திரையுலகின் பொற்கால சினிமாவை ஒளியூட்டிய மிகப் பெரிய நடிகை சரோஜா தேவி, இன்று பெங்களூரில் உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், அவரது மறைவு குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.தனது அதிகாரபூர்வ அறிக்கையில் முதல்வர், “சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் ஆகிய முப்பெரும் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார் நடிகை சரோஜா தேவி. அவரது அழகு, நடிப்புத் திறமை, பாசமும் உணர்வும் கலந்த முகபாவனைகள் அனைத்தும், தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றன.அவருடைய மறைவு, தமிழ் சினிமாவிற்கு நீங்கா இழப்பாகும். அவரின் குடும்பத்தினருக்கும், உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.” என்று கூறியிருந்தார். முதல்வரின் இரங்கலுடன் இணைந்து, ரஜினி, வைரமுத்து உள்ளிட்ட திரைத்துறையின் பல முன்னணி பிரபலங்களும் தங்களது மனமுருகிய பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.