இலங்கை

மனநல சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் வைத்தியர் ; தேசிய வைத்தியசாலைக்குள் அடாவடி

Published

on

மனநல சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் வைத்தியர் ; தேசிய வைத்தியசாலைக்குள் அடாவடி

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் அலுவலகத்திற்குள் இன்று (14) காலை வலுக்கட்டாயமாக நுழைந்து அவரது நாற்காலியில் அமர்ந்த ஒரு பெண், மனநல சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு சுகாதார நிறுவனத்தில் பணிபுரியும் வைத்தியர் என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இன்று காலை 10 மணியளவில் தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு வந்த அந்த பெண், பிரதிப் பணிப்பாளர் நாயகத்தை அச்சுறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

பிரதிப் பணிப்பாளர் நாயகம், தனது இருக்கையை விட்டு வெளியேறியவுடன், அந்த இருக்கையில் அமர்ந்த வைத்தியர் தனது கடமைகளை முறையாகச் செய்ய முடியாவிட்டால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூச்சலிட்டதாக வைத்தியசாலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை அதிகாரிகள் வந்து வைத்தியரை தேசிய வைத்தியசாலையின் மனநலப் பிரிவுக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.

Advertisement

அவருக்கு மனநலப் பிரச்சினை உள்ளதா என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருவதாக வைத்தியசாலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version