உலகம்
லண்டன் விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து!
லண்டன் விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து!
இங்கிலாந்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்று மாலை சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இது பாரிய அளவிலான அவசர நடவடிக்கை மற்றும் விமான சேவைகளை இரத்து செய்யவும் வழிவகுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சவுத்எண்ட்-ஆன்-சீயில் உள்ள இடத்தில் 12 மீற்றர் நீளமுள்ள விமான விமானம் தீப்பிடித்து எரிவதாக மாலை 4 மணிளவில் எசெக்ஸ் பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், பொது மக்கள் விபத்து நடந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் அல்லது அவர்களின் நிலை குறித்து அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.
இந்த விபத்தால் நேற்று மாலை குறைந்தது நான்கு திட்டமிடப்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய வலைத்தளம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.