இலங்கை
விசேட சோதனையில் பெருந்தொகையான போதைப்பொருட்கள் மீட்பு !
விசேட சோதனையில் பெருந்தொகையான போதைப்பொருட்கள் மீட்பு !
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது , 922 கிலோ கிராம் ஹெரோயின், 1,386 கிலோ கிராம் ஐஸ் , 10,895 கிலோ கிராம் கஞ்சா 22 கிலோ கிராம் கொக்கேயின், 329 கிலோ கிராம் ஹேஷ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது 106,000 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை