தொழில்நுட்பம்
ஸ்மார்ட் டிவி வாங்க ஐடியா இருக்கா?… டால்பி விஷன்/அட்மாஸ், 4K அம்சங்களுடன் அசத்தும் சலுகைகள்!
ஸ்மார்ட் டிவி வாங்க ஐடியா இருக்கா?… டால்பி விஷன்/அட்மாஸ், 4K அம்சங்களுடன் அசத்தும் சலுகைகள்!
இன்றைய டிஜிட்டல் உலகில் பொழுதுபோக்கு என்பது நமது அன்றாட வாழ்க்கையின் முக்கிய பகுதியாக மாறிவிட்டது. திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் கேம்களை பெரிய திரையில், தெளிவான படத் தரத்துடனும், ஒலி அனுபவத்துடனும் ரசிப்பது அனைவரின் விருப்பமாக உள்ளது. ஒரு புதிய டிவி வாங்கும்போது, சிறந்த டிஸ்ப்ளே தரம், சக்திவாய்ந்த ப்ராசஸர் மற்றும் உயர்தர ஒலி அனுபவத்தை வழங்கும் Dolby Vision மற்றும் Dolby Atmos சப்போர்ட் ஆகியவற்றை நாம் முதலில் பார்க்கிறோம். இந்த அம்சங்கள், ஸ்பீக்கர்களின் தேவை இல்லாமல், சினிமா அனுபவத்தை உங்கள் வீட்டிலேயே கொண்டு வரும்.ப்ளிப்கார்ட்டில் ரூ.26,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ள இந்த டிவி, HDFC பேங்க் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு ரூ. 2,000 தள்ளுபடி வழங்குகிறது. மேலும், Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ. 4,000 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் இந்த டிவியை வெறும் ரூ.19,999-க்கு வாங்க முடியும். 2025 எடிஷனுடன் வரும் 43 இன்ச் அல்ட்ரா HD (4K) LED ஸ்மார்ட் டிவி. இதில் Dolby Atmos சப்போர்ட் மற்றும் 30W Dolby ஆடியோ சப்போர்ட் ஆகியவை உள்ளன. மேலும், Ultra HD (4K) 3840 x 2160 பிக்ஸல் ரெசல்யூஷன், Filmmaker Mode அம்சம் ஆகியவை தெளிவான பட அனுபவத்தை உறுதி செய்கின்றன.மோட்டோரோலாவின் இந்த 43 இன்ச் QLED டிவி ரூ.22,499-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. HDFC மற்றும் HSBC பேங்க் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.1,500 கேஷ்பேக் பெறலாம். Flipkart Axis Bank கார்டு மூலம் வாங்கினால் ரூ. 4,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 43 இன்ச் அல்ட்ரா HD (4K) 3840 x 2160 ரெசல்யூஷனுடன் வரும் QLED டிவி. Dolby Atmos சப்போர்ட் உடன் 48W அவுட்புட் சப்போர்ட் வழங்கும் இதன் ஆடியோ தரம் தனித்துவமானது. இது Google TV சப்போர்ட்டையும் கொண்டுள்ளது.iFFALCON நிறுவனத்தின் இந்த 43 இன்ச் டிவி வெறும் ரூ. 18,999-க்கு கிடைக்கிறது. HDFC, HSBC மற்றும் BOBCARD EMI மூலம் வாங்கினால் ரூ. 1,500 வரை தள்ளுபடி பெறலாம். 43-இன்ச் அல்ட்ரா HD (4K) 3840 x 2160 ரெசல்யூஷனுடன், மெட்டாலிக் பெஸல் லெஸ் டிசைனுடன் வருகிறது. Dolby Vision-Atmos சப்போர்ட் மற்றும் 24W சவுண்ட் அவுட்புட் கொண்டது. குறைந்த விலையில் சிறந்த காட்சி மற்றும் ஒலி அனுபவத்தை விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாகும்.ரியல்மீயின் இந்த 55 இன்ச் QLED டிவி ரூ.29,999-க்கு கிடைக்கிறது. HDFC, HSBC மற்றும் BOBCARD EMI மூலம் வாங்கினால் ரூ. 1,500 வரை தள்ளுபடி. மேலும், Flipkart Axis Bank கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ. 4,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது பெரிய 55-இன்ச் QLED அல்ட்ரா HD (4K) 3840 x 2160 ரெசல்யூஷனுடன் வருகிறது. Dolby Atmos சப்போர்ட் கொண்ட இந்த டிவி, சக்திவாய்ந்த சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது. பெரிய ஸ்கிரீனில் சிறந்த அனுபவத்தை விரும்புபவர்களுக்கு இது பொருத்தமான தேர்வாகும்.இந்த டிவிகள் அனைத்தும் சிறந்த காட்சி மற்றும் ஒலி அனுபவத்தை வழங்கும் Dolby Vision மற்றும் Dolby Atmos அம்சங்களுடன் வருகின்றன. உங்கள் பட்ஜெட், ஸ்கிரீன் அளவு மற்றும் விரும்பும் பிராண்டைப் பொறுத்து, இந்த சிறந்த ஆஃபர்களில் இருந்து உங்களுக்கான சரியான டிவியைத் தேர்வு செய்யலாம்.