வணிகம்
10.90% முதல் வட்டி – ரூ. 40 லட்சம் வரை பெர்சனல் லோன்; நிதி தேவையை பூர்த்தி செய்யும் இந்த வங்கி: நோட் பண்ணுங்க மக்களே
10.90% முதல் வட்டி – ரூ. 40 லட்சம் வரை பெர்சனல் லோன்; நிதி தேவையை பூர்த்தி செய்யும் இந்த வங்கி: நோட் பண்ணுங்க மக்களே
வீட்டு கடன், அவசர மருத்துவ செலவுகள், கல்வி அல்லது வேறு எந்த தனிப்பட்ட நிதி தேவைக்கும் உடனடியாக பணம் தேவைப்படும் நபர்களுக்கு பெர்சனல் லோன் என்று சொல்லக் கூடிய தனிநபர் கடன் ஒரு தீர்வாக அமைகிறது.இந்த சூழலில், ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் இருந்து வழங்கப்படும் தனிநபர் கடன்களுக்கு ஜூலை 2025 நிலவரப்படி 10.90% முதல் 24% வரை வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது. இது உங்கள் வருமான நிலை, கிரெடிட் ஸ்கோர் மற்றும் பணிபுரியும் நிறுவனத்தின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து அமையும். குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் எளிமையான டிஜிட்டல் செயல்முறையுடன் இவை கொடுக்கப்படுகிறது. இவற்றின் முக்கிய அம்சங்களை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.முக்கிய அம்சங்கள்:கால அளவு: 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை உங்கள் வசதிக்கேற்ப கடனை திருப்பி செலுத்தும் காலத்தை தேர்வு செய்யலாம்.அதிக கடன் தொகை: ரூ. 50,000 முதல் ரூ. 40 லட்சம் வரை கடன் பெற முடியும். இதற்கான செயலாக்கக் கட்டணமாக ரூ. 6500 மற்றும் ஜி.எஸ்.டி பெறப்படும்குறைந்தபட்ச ஆவணங்கள்: KYC ஆவணங்கள், வருமானச் சான்று, வேலைவாய்ப்பு விவரங்கள் மற்றும் Form 16/ITR போன்ற அடிப்படை ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும்.தகுதி அளவுகோல்கள்:வயது: விண்ணப்பதாரர் 21 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும் (கடன் முடியும் தருவாயில்).வேலைவாய்ப்பு: சம்பளம் பெறுபவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.வருமானம்: குறைந்தபட்ச மாத வருமானம் ரூ. 25,000 ஆக இருக்க வேண்டும். (இது நகரம் மற்றும் விண்ணப்பதாரரின் தொழில் விவரத்தைப் பொறுத்து மாறுபடலாம்).பணி அனுபவம்: குறைந்தபட்சம் 2 வருட மொத்த பணி அனுபவம் இருக்க வேண்டும், அதில் 1 வருடம் தற்போதைய பணி/வணிகத்தில் இருக்க வேண்டும்.கிரெடிட் ஸ்கோர்: 700+ கிரெடிட் ஸ்கோர் இருந்தால் சிறப்பாக இருக்கும். ஏனெனில், இது சிறந்த வட்டி விகிதங்களைப் பெற உதவும்.