இலங்கை

அமெரிக்க வரிச் சிக்கலுக்கு அரசாங்கத்தின் தீர்வு என்ன…எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி!

Published

on

அமெரிக்க வரிச் சிக்கலுக்கு அரசாங்கத்தின் தீர்வு என்ன…எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சகல பொருள்களுக்கும் 30 வீத பரஸ்பர தீர்வை வரியை விதித்துள்ளார். இது நாட்டின் ஏற்றுமதிகளின் மீது கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
இந்த வரி விதிப்பு ஆடை, தேயிலை, இறப்பர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மீன்பிடித்துறைகளுக்குக் கடுமையான எதிர்மறையான தாக்கத்தைக் கொண்டுவரும்.

Advertisement

நாட்டின் ஏற்றுமதியில் 26.4 சதவீதப் பங்களிப்பைப் பெற்றுத்தரும் ஏற்றுமதித் தளமாக அமெரிக்கா உள்ளது. 2024ஆம் ஆண்டில் எமது நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 3.8 பில்லியன் டொலராகும். 30 சதவீத தீர்வை வரி விதிக்கப்படுவதால் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளும்.

தற்போதைய அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்குச் சிறந்த தீர்வைக்காண தன்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறதா என்ற கேள்வி எம்மத்தியில் காணப்படுகின்றது. இரு நாடுகளுக்கும். இடையில் பேச்சு நடத்தி பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் சரியாகப் பின்பற்றப்பட்டதா என்பதிலும் பிரச்சினை இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் வழங்கும் பதில்களும் தீர்வுகளும் என்ன? இந்தப் பிரச்சினைக்கான தெளிவான தீர்வை அரசாங்கத் திடமிருந்து அறிந்து கொள்வது எமக்கு முக்கியமானது-என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version