இலங்கை
இன்னும் திருத்தப்படாத வீதி ஜனாதிபதி உத்தரவு உதாசீனமா; யாழ்ப்பாணத்தில் இந்த நிலை
இன்னும் திருத்தப்படாத வீதி ஜனாதிபதி உத்தரவு உதாசீனமா; யாழ்ப்பாணத்தில் இந்த நிலை
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வைத்து, ஜனாதிபதி அநுர உடனடியாகத்திருத்துமாறு உத்தரவிட்டிருந்த வீதியொன்று. இன்றளவும் சீரமைக்கப்படாமல் காணப்படுகின்றது குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றது என பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமொன்று. ஜனவரி மாதம் மாதம் 31ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஜனாதிபதி வருகை தரும்போது, சில பிரச்சினைகள் தொடர்பில் அறிந்தும், சிலமுன்னாயத்தங்களுடனும் தான் வந்திருந்தார்.
இதன்படி, அச்சுவேலி – தொண்டமனாறு பின்வீதி நீண்டகாலமாகச் சேதமடைந்து காணப்படுகின்றது என்றும், அதைச் சீரமைக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதியால் உத்தரவிட்டிருந்தார். ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல் வழங்கி ஏழு மாதங்களாகின்ற நிலையில், இன்று வரை அந்த வீதி சீரமைக்கப்படவில்லை. ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வைத்து, ஜனாதிபதி அநுரவே ஒருவிடயத்தில் உத்தரவிட்ட பின்னரும், அந்தப் பணிகள் இடம்பெறவில்லை என்றால், அத்தகைய கூட்டங்கள் தேவைதானா? என்று பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.