உலகம்

உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் பதவி விலகல்

Published

on

உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் பதவி விலகல்

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் பல லட்சம் பேர் கொல்லப்பட்டு உள்ளனா். 

இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தாலும், இருநாடுகளும் போரை நிறுத்தால் தொடர்ந்து தாக்கி வருகின்றனா்.

Advertisement

இந்நிலையில், ரஷியாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமா கடிதத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் டெனிஸ் ஷிம்ஹால் வழங்கினார். 

அவரது ராஜினாமாவை ஏற்ற அதிபர் ஜெலன்ஸ்கி புதிய பிரதமராக யூலியா ஸ்வைரிடென்கோவின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

Advertisement

உக்ரைன் பிரதமர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version