இலங்கை

“எமது பூர்வீக நிலத்தை மீள எம்மிடம் ஒப்படையுங்கள்” – ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் போராட்டம்!

Published

on

“எமது பூர்வீக நிலத்தை மீள எம்மிடம் ஒப்படையுங்கள்” – ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள விடுவிக்கப்படாத நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி இன்றைய தினம்  ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் போராட்டமொன்று நடைபெற்றது. 

கொழும்பு கோத்தா வீதியில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் இன்று காலை அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது. 

Advertisement

“எமது பூர்வீக நிலத்தை மீள எம்மிடம் ஒப்படையுங்கள்” என்பதை பிரதானமாக வலியுறுத்தும் இப்போராட்டத்தில் யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள பாரம்பரிய நிலங்களை இலங்கை அரச படைகளிடம் இருந்து விடுவிக்க வலியுறுத்தப்பட்டது.

இதன்போது, ‘மண்ணாசை துறந்த புத்தரின் பிள்ளைகளுக்கு மாற்று இனத்தவரின் மண்ணில் ஏன் ஆசை?, எமது மக்கள் வாழ்வாதாரம் இழந்து வாட அரச படைகள் இலாபம் ஈட்டுவது முறையா? , பூர்வீக காணிகளை இழந்த மக்களாக எமது அகதி வாழ்க்கை போதும்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி மக்கள் அமைதியான முறையில்  போராட்டத்தில் ஈடுபட்டனர் 

மன்னார் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போராட்டத்தில், விடுவிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர்  பங்கேற்றனர்.

Advertisement

போராட்டம் நடைபெற்ற பகுதியில் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version