இலங்கை
எமிரேட்ஸ் நிறுவனத்தின் புதிய விமானம் சேவையில்!
எமிரேட்ஸ் நிறுவனத்தின் புதிய விமானம் சேவையில்!
சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ், புதுப்பிக்கப்பட்ட நான்கு வகுப்பு போயிங் 777 விமானத்தை ஜூலை 18 முதல் துபாய் மற்றும் கொழும்பு இடையே சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
புதிதாக கட்டமைக்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட கேபின்களுடன் மேம்படுத்தப்பட்ட விமானங்களின் சேவைகள், இலங்கையில் பிரீமியம் எகானமி இருக்கைகளைக் கொண்ட விமான நிறுவனத்தின் இரண்டாவது தினசரி விமானமாக இந்த விமானம் அமைக்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸின் EK650 விமானம் துபாயிலிருந்து 02:40 மணிக்குப் புறப்பட்டு 08:35 மணிக்கு கொழும்பை வந்தடைகிறது. திரும்பும் விமானம் EK651 கொழும்பிலிருந்து 10:05 மணிக்குப் புறப்பட்டு 12:55 மணிக்கு துபாய் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரீமியம் எகானமி டிக்கெட்டுகளை உடனடியாக emirates.com, எமிரேட்ஸ் ஆப் அல்லது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயண முகவர்கள் மூலமாகவும், எமிரேட்ஸ் சில்லறை விற்பனைக் கடைகளிலும் முன்பதிவு செய்யலாம் என்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.